Tamil News, Tamil seithigal, Tamil News Online, Tamil News | Latest Tamil news | Tamilnadu news | தமிழ் செய்திகள் | Tamil News online | Tamil News website - The Madras Post
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்ஸவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். இவ்வாண்டு ஜனவரி 6-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. ஆனால் சில கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது இல்லை. அக்கோவில்களை பார்க்கலாம்.
கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. மகாலட்சுமியை மணமுடிப்பதற்காக திருமால் வைகுண்டத்தில் இருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். இங்கு உத்திராயன, தட்சிணாயன வாசல்கள் தனித்தனியாக உள்ளன. இந்த வாசல்களை கடந்து சென்றாலே பரமபதம் (மோட்சம்) கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவெள்ளறை பெருமாள் கோவில்
அதேபோல திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக திகழ்கிறது. இங்கும் வைகுண்ட ஏதாசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. தாயார் நாமம் செங்கமலதாயார். இங்கும் தட்சிணாயன, உத்தராயண வாசல் உள்ளது. திருச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.