ரூ. 175 போதைப் பொருட்களுடன் குஜராத் கடல்பகுதியில் சிக்கிய பாகிஸ்தானியர்கள்…!

Read Time:2 Minute, 8 Second

இந்தியாவிற்கு எதிராக அனைத்து செயல்களையும் செய்யும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்வதுடன், போதைப்பொருட்களையும் அனுப்பி வருகிறது. இப்படி போதைப்பொருட்களுடன் வந்தவர்களை இந்தியப்படைகள் கைது செய்துள்ளது.

குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) இந்திய கடலோர காவல்படையுடன் (ஐசிஜி) மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் திங்களன்று குஜராத்தில் கட்ச் பகுதியில் நடுக்கடலில் ரூ. 175 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருட்களுடன் 5 பாகிஸ்தானியர்கள் சிக்கினர். குஜராத் கடல்பகுதியில் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல்களைப் பெற்ற பின்னர் படைகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில டிஜிபி சிவானந்த் ஜா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கான முயற்சிகளை தடுக்க நாங்கள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம், 1600 கி.மீ நீளமுள்ள கடற்கரையின் கடலோர பாதுகாப்புக்கு முன்னால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை கூட்டு நடவடிக்கையில் 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 175 கோடி டாலர் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் கடல் வழியை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவர கடத்தல்காரர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.