12 ஏவுகணை வீசப்பட்டத்தில் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் சாவு – ஈரான் அரசு மீடியா

Read Time:1 Minute, 52 Second
Page Visited: 88
12 ஏவுகணை வீசப்பட்டத்தில் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் சாவு – ஈரான் அரசு மீடியா

12 ஏவுகணை வீசப்பட்டத்தில் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் இறந்தனர் என ஈரான் அரசு மீடியா தகவல் வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் தங்களது முக்கிய படைத்தலைவா் காசிம் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் சபதமிட்டது. அமெரிக்கா செய்த அவசரத்தனத்தால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிக்கும் என்று ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் எச்சரித்தன. ஈரான் அமைதியாக இருந்த போது ஏதேனும் மிகப்பெரிய பின்விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்க தொடங்கினர்.

இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்கப்படைகள் நிலைக்கொண்டுள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. இந்த தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் இறந்தனர் என ஈரான் அரசு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே நிலைமையை மோசமாக்கும் விதத்தில் அமெரிக்கா எதிர்த்தாக்குதலை மேற்கொண்டால் பதிலடிகள் கடுமையாக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் விமானப்படை தளங்களை ஈரான் தாக்கியதை அடுத்து மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. முன்னதாக அமெரிக்க படைகளை ஈரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %