ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பயணிகளும் உயிரிழப்பு

Read Time:1 Minute, 53 Second

ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்திலிருந்த 170 பேரும் உயிரிழந்தனர்.

ஈரான் – அமெரிக்க மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இருநாடுகள் இடையே போர் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்திலிருந்த 170 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் ஈரான் தலைநகர் தெக்ரானிலிருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விபத்துக்குள் சிக்கியது. விமானம் விழுந்து நொறுங்கியதில் தீபிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிலிருந்த 170 பேரும் உயிரிழந்துவிட்டனர் என ஈரானிய மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான் – அமெரிக்க மோதலில் விமானம் விபத்துக்குள் சிக்கியதா என்பது தெளிவாகவில்லை. இதற்கிடையே விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக ஆய்வை மேற்கொள்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கியது உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 (Boeing-737) என தெரியவந்துள்ளது.