காட்டுத்தீ ஏற்படுகிறது…! 10,000 ஒட்டகங்களை கொல்லப்போகும் ஆஸ்திரேலியா…!

Read Time:4 Minute, 56 Second
Page Visited: 74
காட்டுத்தீ ஏற்படுகிறது…! 10,000 ஒட்டகங்களை கொல்லப்போகும் ஆஸ்திரேலியா…!

ஆஸ்திரேலியாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ காரணமாக அந்நாட்டு அரசு 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதிகள் வறட்சியால் மாதக்கணக்காக காட்டுத்தீக்கு இரையாகியது. ஆஸ்திரேலிய படைகள் முழுவீச்சில் இறங்கி தீயை அணைக்க முயற்சி செய்கிறது. நாட்டில் வறட்சி அதிகமாக நிலவுகிற சூழலில், நீர் பற்றாக்குறையாகி கொண்டிருப்பதாகவும் அதற்குக் காரணம் தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ஒட்டகங்கள்தான் என்றும் அரசு கூறியுள்ளது.

எனவே, 10,000 ஒட்டகங்களை சுட்டுக் கொல்லப்போவதாக அரசு அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர்களில் கைதேர்ந்த வேட்டைக்காரர்களை வைத்து இந்த வேட்டையில் அந்நாட்டு அரசு இறங்கப்போகிறது.

நீர் கிடைக்கும்போது தேவைக்கும் அதிகமாகவே குடித்து சேமித்து வைத்துக்கொண்டு வாழும் ஒட்டகங்களால், ஆஸ்திரேலியாவின் தட்பவெப்பநிலைக்கு தகுந்தவாறு இருக்க முடியும். 2010-ம் ஆண்டு, அந்நாட்டின் தேசிய ஒட்டக மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக தெரியவந்தது. இப்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 12 லட்சம் ஒட்டகங்கள் 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

கங்காருகள், ஈமு கோழிகள் என்று ஆஸ்திரேலியாவின் இயல் உயிரினங்களுடைய வாழ்விடங்களுக்கு இவை இடைஞ்சல் ஏற்படுத்துவதாகவும் அவை பூர்வகுடி மக்கள் பயன்படுத்துகின்ற வறண்ட பிரதேசத்திலுள்ள சிறிய நீர்நிலைகளைக்கூட விட்டு வைப்பதில்லையென்றும் குற்றச்சாட்டு நிலவுகிறது. ஒட்டகங்கள் ஒரே நேரத்தில் பல லிட்டர் நீரைக் குடித்து மக்கள், விவசாயிகள், பிற விலங்குகளுக்கு இடையூறாக உள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ பிரச்னையிலும் அவற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி அவற்றை சுட்டுக்கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அனங்கு பிட்ஜன்ஜட்ஜரா யன்குன்யத்ஜட்ஜரா (Anangu Pitjantjatjara Yankunytjatjara, APY) என்ற பூர்வகுடியின நிலத்தில் ஒட்டக வேட்டை நடத்தப்பட உள்ளது. வறண்ட காலநிலை மற்றும் ஒட்டகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அங்கு தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், இப்போது இந்த வேட்டை அவசியமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
எண்ணிக்கையில் மான்கள் அதிகரித்ததால் அவற்றை வேட்டையாட கனடா அரசு அனுமதியளித்தது, அதேபோல், எண்ணிக்கையில் அதிகரித்துவிட்ட ஒட்டகங்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டுவரத்தான் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் நேர்மறையாக இருக்குமா அல்லது எதிர்மறையாக இருக்குமா என்று அந்நாட்டுச் சூழலியலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த ஒட்டகங்களின் கழிவுகள் ஒரு டன் கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான, மீத்தேன் வாயுவை உருவாக்குவதாக கூறப்படுகிறது. இது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்போது காட்டுத்தீ சோகத்திற்கு மத்தியில் தண்ணீரை அதிக அளவில் குடிப்பதாக கூறி ஒட்டகங்களை கொல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %