இந்தியாவில் தாக்குதல் நடத்த வங்காளதேச பயங்கரவாத குழுக்களுக்கு ஐ.எஸ்.ஐ. நிதியுதவி..!

Read Time:2 Minute, 40 Second
Page Visited: 97
இந்தியாவில் தாக்குதல் நடத்த வங்காளதேச பயங்கரவாத குழுக்களுக்கு ஐ.எஸ்.ஐ. நிதியுதவி..!

இந்தியாவில் பிரச்சினைகளை தூண்டும் முயற்சியில், வங்காளதேச பயங்கரவாத குழுவான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜே.எம்.பி) அமைப்புக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி அளித்து வருவதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது.

உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்கியா குழுக்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் தங்கியுள்ள குறைந்தது 40 ரோஹிங்கியாக்களை தனது மோசமான பணிக்காக எடுத்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, முதல் தவணையாக வங்காளதேச பயங்கரவாத அமைப்புக்கு ரூ .1 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), எல்லை பாதுகாப்பு படை மற்றும் ரா உளவுப்பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகமைகள் வங்காளதேச பயங்கரவாதிகள் மற்றும் ரோஹிங்கியாக்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஜமாத்-உல்-முஜாஹிதீன் இந்தியா அல்லது ஜமாஅத்-உல்-முஜாஹிதீன் இந்துஸ்தான் என்று அழைக்கப்படும் ஜே.எம்.பி. அமைப்பை இந்தியா தடை செய்தது. கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் 22 வயதான ஜே.எம்.பி பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். , பெங்களூரில் ஒரு பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.

பாகிஸ்தான் பகுதியிலிருந்து பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான், இப்போது வங்காளதேசத்திலும் தன்னுடைய பணியை தீவிரப்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %