இந்தியாவில் 37 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரேநாளில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை…!

Read Time:5 Minute, 11 Second

இந்தியாவில் 37 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரேநாளில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று கூடுதல் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஏற்கனவே இவர்களை தூக்கிலிடுவதற்கு தூக்கு கயிறுகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஒரேநாளில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சம்பவம் 37 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கிறது.

மராட்டியத்தில் கடந்த 1976 ஜனவரி 16-ம் தேதி கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதன்பின் 1976 அக்டோபர் 31-ம் தேதி முதல் 1977, மார்ச் 23-ம் தேதிக்குள் பல்வேறு இடங்களில் 9 தொடர் கொலைகள் அரங்கேறியது. வீடுகளில் தனியாக வசிப்போர், தனியாக சாலையில் செல்வோர், பெண்கள் எனப் பலரையும் பணத்துக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இறுதியாக மும்பையில் அபயங்கார் என்பவரின் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்யப்பட்ட பின்புதான் இவ்வழக்குகளில் விசாரணை தீவிரம் அதிகரித்தது.

மும்பையில் கடந்த 1976-77 ம் ஆண்டில் நடந்த ஜோஷி-அபயங்கார் தொடர் கொலைகள் மும்பை மக்களை உலுக்கி எடுத்தன. ஒரு ஆண்டுக்குள் 10 பேர் கொல்லப்பட்டதால், மும்பை மக்கள் மனதை பதைபதைக்க செய்தது. இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சிறப்புப் படைகள் உருவாக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது. பல குழுக்கள் நடத்திய விசாரணையின் முடிவில் தொடர் கொலைகளை நடத்தியது இந்த கல்லூரி மாணவர்கள்தான் என்பது தெரியவந்தது.

போலீசாரில் பலகட்ட விசாரணையில் இந்தக் கொலையை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்தது செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுஹாஸ் சந்தாக் என்பவர் அப்ரூவராக மாறியதையடுத்து, குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். புனேவில் உள்ள திலகர் சாலையில் உள்ள அபிநவ் காலா மகாவித்யாலயா கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்து வந்த 4 மாணவர்கள்தான் இந்த 10 கொலைகளையும் செய்தனர். ராஜேந்திர ஜக்கால், திலிப் சுத்தார், சாந்தாராம் ஜக்தாப், முனாவர் ஹருன் ஷா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் அதிகபட்சமான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்களுக்கும் மும்பை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, கடந்த 1983-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி மும்பை எர்ரவாடா மத்திய சிறையில் 4 பேருக்கும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, தற்போது நிர்பயா வழக்கில் ஒரே நாளில் 4 பேருக்கு வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

திகார் சிறையில் இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “திகார் சிறையில் உள்ள தூக்கு மேடை மிகவும் பழமையானது. ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே தூக்கிலிட முடியும். இந்த முறை ஒரே நாளில் 4 பேர் தூக்கிலிடப் பட உள்ளனர். ஆதலால், தூக்கு மேடைகளை மாற்றி, ஒரே நேரத்தில் இருவரைத் தூக்கிலிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, புதிய தூக்கு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %