’96’ தெலுங்கு ரீமேக் டீசர்… ஜெசி, ஜானுவாக திரிஷாவை மிஞ்ச முடியாது… சமந்தா பதில்

Read Time:4 Minute, 12 Second
Page Visited: 116
’96’ தெலுங்கு ரீமேக் டீசர்… ஜெசி, ஜானுவாக திரிஷாவை மிஞ்ச முடியாது…  சமந்தா பதில்

சி.பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘96’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்தார். விஜய் சேதுபதி – த்ரிஷா சின்ன வயது கதாபாத்திரத்தில் ஆதித்யா – கெளரி கிஷண் நடித்தனர். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பள்ளி காதல் அழகாக சொல்லப்பட்டிருக்கும் இப்படம் அனைவருடைய மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தியேட்டரில் வெளிவந்தவர்கள் எல்லாம் தங்களுடைய பழைய நினைவுகளை சுமக்க செய்தது படம். சமூக வலைதளங்களிலும் அழகான கருத்துக்களால் அலங்கரிக்கப்பட்டது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இந்த படத்தை ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க, சர்வானந்த் – சமந்தா இருவரும் நடிக்கின்றனர். அங்கும் கோவிந்த் வசந்தாவே இசையமைக்கிறார். தெலுங்கிலும் ஜானுவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் கெளரி கிஷணே நடித்துள்ளார். படத்துக்கு ’ஜானு’ எனத் தலைப்பிடப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

‘ஜானு’ படத்தின் டீசர் ஜனவரி 9 மாலை 5 மணிக்கு வெளியானது, என்னதான் தமிழில் பார்த்து இருந்தாலும் தெலுங்கில் எப்படியிருக்கும் என டீசரை பலரும் பார்த்து வருகின்றனர். தெலுங்கில் புதியதாக பார்க்கும் ரசிகர்கள் பலர் சமந்தாவை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், தமிழில் பார்த்தவர்கள் என்ன இருந்தாலும் திரிஷா மாதிரி வருமான என கமாண்ட்களை பதிவிட்டனர். கெளரி கிஷண் தன்னுடைய அதே நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். ஆனால் சமாந்தாவின் நடிப்புக்குதான் பலரும் விமர்சனம் தெரிவிக்கின்றனர். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இடையிலான பீலிங், ஜானுவில் சமந்தா மற்றும் சர்வானந்த் இடையே இல்லையென பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமந்தாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். ஒரிஜினல் சாயம் இல்லாமல் சமந்தா தனது சிறப்பான முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதுதான் ஒரு சிறந்த நடிகருக்கு அடையாளமாகும். அவரது நடிப்பை காண மிகவும் ஆவலாக காத்து கொண்டிருக்கிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் கூறியுள்ள சமந்தா, மிக்க நன்றி… சிறப்பாக நடித்த திரிஷாவை போன்று நான் காப்பி நடித்த கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அது நடக்கவும் நடக்காது. ஜானு அதற்காக உருவாக்கப்பட்ட படம் கிடையாது மற்றவர்கள் இதனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது என கூறியுள்ளார். இருப்பினும் அவரை விடாது கலாய்க்கும் ரசிகர்கள் ஜெஸ்ஸி, ஜானு என்ற இரண்டு கதாபாத்திரத்திலும் திரிஷாவை சமந்தா மிஞ்ச முடியாது என்று ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர். விண்ணை தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் ஜெஸ்ஸியாக சமந்தா நடித்திருந்தார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %