மலேசியா மீது மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா திட்டம்..!

Read Time:2 Minute, 59 Second
Page Visited: 62
மலேசியா மீது மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா திட்டம்..!

காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்த மலேசிய பிரதமர் மகாதீர் முகமது.

இதனை தொடர்ந்து இந்திய தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது, மேலும் மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் மற்றும் மின் சாதன பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில் பங்களிப்பு உள்ளது.

இந்தியா கிட்டத்தட்ட 15 மில்லியன் டன் காய்கறி எண்ணெயை வாங்குகிறது, இதில் பாமாயில் 9 மில்லியன் டன்களைக் கொண்டுள்ளது, இந்தோனேசியா மற்றும் மலேசியா முதல் இரண்டு இறக்குமதியாளர்களாக உள்ளன. மலேசிய பாமாயிலுக்கு மிகப்பெரிய சந்தை இந்தியா.

மகாதீர் முகமது மலேசிய ஊடகங்களில் பேசும் போது

“நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம், ஏனென்றால் நாங்கள் நிறைய பாமாயிலை இந்தியாவுக்கு விற்கிறோம், ஆனால் மறுபுறம், நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், ஏதாவது தவறு நடந்தால் அதை நாங்கள் சொல்ல வேண்டும்.”

“பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க அனுமதித்தால், நிறைய விஷயங்கள் தவறாகிவிடும்”

“உண்மை என்னவென்றால், இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மற்றவர்களிடம் பாகுபாடு காண்பது தவறு என்று முழு உலகமும் உணர்கிறது என கூறினார்.

இதைத் தொடர்ந்து நுண்செயலிகளுக்கும் தொழில்நுட்ப தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான தரக் கட்டுப்பாட்டு உத்தரவை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் இப்போது செயல்பட்டு வருகிறது.

தரக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்குவதை உறுதி செய்ய சுங்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %