பாகிஸ்தானில் மூன்று இந்து சிறுமிகள் கடத்தல்: பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு – இந்தியா சம்மன்!

Read Time:2 Minute, 4 Second

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசில் சிறுபான்மையினரான இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கடத்தி பலவந்தமாக திருமணம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் அங்கு மூன்று மைனர் சிறுமிகளை கடத்திய வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக மூத்த அதிகாரியை நேற்று (வெள்ளிக்கிழமை) அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

ஜனவரி 14 ம் தேதி, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ள உமர் கிராமத்தில் இருந்து ‘சாந்தி மேக்வாட்’ மற்றும் ‘சர்மி மேக்வா’ ஆகிய இரண்டு சிறு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டனர், அப்பகுதியில் இந்து மக்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 15 அன்று மற்றுமொரு சம்பவத்தில், ‘மெஹாக்’ என்ற இந்து சிறுமி, சிந்துவின் யாக்கோபாபாத் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டார்.

“சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் மற்றும் இழிவான சம்பவங்களுக்கு இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்ட கடுமையான கவலைகள் குறித்தும் இந்தியாவின் “கடுமையான கவலைகள்” குறித்தும் பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த பதட்டங்களைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.