செல்ஃபி மோகம்: நாயுடன் செல்ஃபின் போது நாய் கடித்ததில் முகத்தில் 40 தையல்..!

Read Time:1 Minute, 59 Second

வடமேற்கு அர்ஜென்டினாவை சேர்ந்தவர் லாரா சன்சோன் வயது 17, அவர் தன் தோழியின் நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஆம், லாரா சன்சோன் தன் தோழியை பார்க்க சென்ற போது அவர்கள் வளர்த்து வரும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சார்ந்த வளர்ப்பு நாயுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த நாய் லாராவின் முகத்தை கவ்வியது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாராவுக்கு இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் லாராவின் முகம், வாய் மற்றும் வாயினுள் பகுதியான ஈற்றில் 40 தையல்கள் போடப்பட்டன.


இது தொடர்பாக லாரா சன்சோன் அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா? அல்லது நான் அதைக் கட்டிப்பிடித்தில் பயந்ததா?”. என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் தற்போது செல்பி மோகம் அதிகரித்துள்ள காரணத்தினால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் ஏற்படுகின்றன. இதனால் ரயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள் மற்றும் மிகவும் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுப்பதை தவிர்க்கவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.