இந்தியாவின் நீர்மூழ்கி ஏவுகணை சோதனை வெற்றி; 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லிமாக தாக்கும்

Read Time:1 Minute, 54 Second

நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்து சென்று எதிரி இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை ஜனவரி 19-ம் தேதி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

மூன்று மீட்டர் உயரம் கொண்ட ஏவுகணை ஒருடன்னுக்கும் அதிகமான எடைக்கொண்ட அணு ஆயுதத்தை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்திய கே-4 ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆந்திர மாநில கடற்பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. நீருக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த ஏவுகணையை உருவாக்கியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.

நீர்மூழ்கி கப்பலில் பொருத்துவதற்கு முன்பு மேலும் பல கட்டங்களாக இந்த ஏவுகணை சோதிக்கப்படும் என தெரிகிறது. கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையாகும்.

700 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை தாக்கும் பிஓ-5 ஏவுகணை இந்தியாவின் முதல் நீர்மூழ்கி ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே 3,500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள் இருந்தன. இப்போது இப்பட்டியலியல் இந்தியாவும் இணைந்துள்ளது.