சீனா இஸ்லாமியர்களை சித்தரவதை செய்தால் ஒன்னும் செய்யமாட்டோம் – இம்ரான்

Read Time:3 Minute, 18 Second

பாகிஸ்தான் சீன அரசாங்கத்திற்கு மிகவும் நன்றியுள்ளதாக உள்ளது. “சீனாவுடன் எங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை நாங்கள் தனிப்பட்ட முறையில் கையாள்வோம் என்று முடிவு செய்துள்ளோம், நாங்கள் பொதுவெளிக்கு செல்ல மாட்டோம்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்

சீனாவில் இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இது தொடர்பாக உலக மீடியாக்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் சித்தரவதைக்கு உள்ளாகும் சம்பவம் அவ்வப்போது அங்கிருந்து செய்தியாகிறது. ஆனால், இதுபற்றி சீனாவிடம் நட்பு பாராட்டும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் எதுவும் கேட்பது கிடையாது. இதுவே இந்தியாவில் நடக்காத ஒன்றுக்கு குடைபிடிக்கும்.

இந்நிலையில் சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் சித்தரவதை செய்யப்படுவது குறித்து சீனாவுடன் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டார் . அப்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்று காஷ்மீர் விவகாரம் குறித்துக் குரல் எழுப்பும் நீங்கள் ஏன் சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினர் .

அதற்கு இம்ரான் கான் பதிலளிக்கும்போது, “இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. இந்தியாவில் நடக்கும் அளவுடன் சீனாவில் நடப்பதை ஒப்பிடக் கூடாது. சீனா, பாகிஸ்தானின் சிறந்த நண்பன். எங்களது கடினமான தருணங்களில் சீனா எங்களுக்கு உதவி இருக்கிறது. நாங்கள் இது தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், தனிப்பட முறையில் இவ்விகாரம் தொடர்பாக சீனாவுடன் பேசி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கசிந்த சீன அரசின் ஆவணங்களை வைத்து, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இவ்விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.