சீனர்கள், பாகிஸ்தானியர்களின் சொத்துக்களை விற்கிறது மத்திய அரசு….

Read Time:4 Minute, 30 Second

1962 ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போர், 1965 மற்றும் 1971 பாகிஸ்தானுக்கு எதிரான போர்களுக்கும் பின்னர் இந்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட சீன மற்றும் பாகிஸ்தான் நாட்டிவர்களின் சொத்துக்களை விற்க குழுக்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா போருக்குப் பிறகு, இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டினர் பலர் தங்கள் நாடுகளில் குடியேறி விட்டனர். அவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துகள் ‘எதிரி சொத்துகள்’ என அழைக்கப்படுகிறது.

ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 9,406 ‘எதிரிநாட்டவர் சொத்துக்கள்’, நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள எதிரிநாட்டினரின் பங்குகள் மற்றும் ரூ .38 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மத்திய அரசிடம் உள்ளன. இந்த சொத்துகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை பராமரிப்போருக்கான அதிகாரங்களை வரையறுக்கவும் எதிரி சொத்து சட்டம் 1968–ஐ இயற்றிய மத்திய அரசு, இதற்காக அலுவலகம் ஒன்றையும் நிறுவியது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு குடிபெயர்ந்தவர்களின் வாரிசுகளுக்கு இந்தியாவில் எஞ்சியிருக்கும் சொத்துக்கள் குறித்து எந்தவிதமான உரிமைகோரலும் இருக்காது என்பதை உறுதி செய்வதற்காக இந்த சட்டம் 2017-ல் திருத்தப்பட்டது. பாகிஸ்தான் இதேபோன்ற கிழக்கு பாகிஸ்தானில் (வங்காளதேசம்) இந்தியாவிற்கு சொந்தமான சொத்துக்களை விற்றது. இப்போது இந்திய அரசும் விற்பனை செய்ய உள்ளது.

பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு சொந்தமான 9,280 சொத்துக்கள், சீன நாட்டவர்கள்களுக்கு சொந்தமான 126 சொத்துக்கள் பறிமுதல் செயப்பட்டது. பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றவர்கள் விட்டுச்சென்ற மொத்த சொத்துக்களில், 4,991 உத்தரபிரதேசத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் 2,735 சொத்துக்களும், டெல்லியில் டெல்லியில் 487 சொத்துக்களும் உள்ளன. கேரளாவில் 60 சொத்துக்களும், தமிழகத்தில் 34 சொத்துக்களும் உள்ளது. சீன நாட்டினர் விட்டுச்சென்ற சொத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக மேகாலயாவில் (57) உள்ளது. மேற்கு வங்கத்தில் இதுபோன்ற 51 சொத்துக்களும், அசாம் ஏழு சொத்துக்களும் உள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை இந்திய அரசு விற்க முயற்சித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கான எதிரி சொத்தின் பாதுகாவலரின் காவலில் இருந்த 6.5 கோடி பங்குகளை விற்க உதவும் ஒரு குழுவை நியமித்ததுடன், ஐடி நிறுவனமான விப்ரோவின் 4.44 கோடி பங்குகள் விற்பனையிலிருந்து 1,150 கோடி ரூபாய் உட்பட 1,874 கோடி ரூபாய் திரட்டியது. 2018-19 நிதியாண்டில் ரூ .779 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட 257 நிறுவனங்கள் மற்றும் பட்டியலிடப்படாத 327 நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு இன்னும் வைத்திருக்கிறது. மார்ச் 2019-ல், மத்திய அமைச்சரவை அசையாத ‘எதிரி சொத்து’ சொத்துக்களை பணமாக்குவதற்கான வழிமுறையையும் அனுமதித்தது, இப்போது இதனை விரைவுபடுத்த விரும்புகிறது.

மந்தமான பொருளாதாரம் அரசாங்க வருவாய்களுக்கு அழுத்தம் கொடுக்கும் காலத்தில், சொத்து பணமாக்குதல் (இதில் எதிரி சொத்துக்களை விற்பனை செய்வது ஒரு பகுதியாகும்) குறுகிய காலத்தில் பணத்தை திரட்டுவதற்கான வழியை வழங்குகிறது.