குடியுரிமை திருத்த சட்டம்: கிழக்கு எல்லையில் ஓட்டம் பிடிக்கும் வங்கதேச நாட்டவர்கள்…

Read Time:2 Minute, 36 Second

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்த பின்னர் வெளியேறுவது அதிகரித்து உள்ளது என ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் பிற அமைப்புக்கள் தரப்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்திலிருந்து ஊடுவியவர்கள் சட்டவிரோதமாக குடியிருந்து வருகிறார்கள்.

அசாம் மாநிலத்தில் கடும் போராட்டம் நேரிட்டது. போராட்டக்காரர்கள் வங்காளதேசத்திலிருந்து வந்த யாருக்கும் குடியுரிமை வழங்க கூடாது என வலியுறுத்தினர். இந்நிலையில் கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்த பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிவது அதிகரித்து உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் அச்சம் காரணமாக அவர்கள் வெளியேறி வருகிறார்கள் என ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒய்.பி. குரானியா பேசுகையில், “கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டவர்கள் வெளியேறுவது கணிசமான அதிகரித்து உள்ளது. ஜனவரியில் மட்டும் சட்டவிரோதமாக குடியேறிய 268 வங்காளதேச நாட்டவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம், அவர்கள் அண்டைய நாட்டிற்குள் நுழைய முன்றபோது பிடிப்பட்டனர்,” என கூறியுள்ளார். இதுபோன்று வங்காளதேச நாட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பார்க்கப்படுகிறது.