கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்தியாவை நாடிய சீனா…!

Read Time:3 Minute, 51 Second
Page Visited: 88
கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்தியாவை நாடிய சீனா…!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க ‘முககவசம்’ வேண்டும் என இந்தியாவின் கதவை சீனா தட்டியுள்ளது. இந்தியாவிலிருந்து, N95 முககவசங்களை வாங்குகிறது.

கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் மூக்கு மற்றும் வாய் மீது முககவசங்களுடன் நடந்து கொண்டிருக்கும் சீனாவில் N95 முககவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. N95 முககவசங்கள் அணிவது வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இருக்கிறது. இதனையடுத்து, தேவையை சமாளிக்க சீன நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள மருந்து மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள் உற்பத்தியாளர்களை நாடியுள்ளன.

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜே.ஜெயசீலன் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “N95 முககவசத்திற்காக தமிழ்நாடு உட்பட இந்தியாவில் இருந்து சப்ளையர்களை சீன நிறுவனங்கள் அணுகுகின்றன.

“அடிப்படையில் N95 முககவசங்கள் குறைந்த எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வழக்கமான அறுவை சிகிச்சை முககவசங்கள் போலன்றி, ஆபரேஷன் தியேட்டரிலும், கடுமையான சுவாச நோய் மற்றும் தொற்றுநோய்களின் போதும் N95 முககவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.”

சீனா நிறுவனங்கள் முன்கூட்டியே பணம் செலுத்தி தெளிவான ஆர்டரை வழங்கியவுடன் இங்குள்ள நிறுவனங்கள் முககவசங்களை உற்பத்தி செய்து வழங்க தயாராக உள்ளனர் எனக் கூறியுள்ளார். என்று கூறியுள்ளார்.

இதில், முரண்பாடு என்னவென்றால், சீனாவிலிருந்து பெரிய அளவில் முககவசங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறைந்த பயன்பாடு இருப்பதால் இந்தியாவில் குறைந்த அளவிலே உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்போது சீனாவில் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவிடம் இருந்து கொள்முதல் செய்கிறது.

இதற்கிடையே போதுமான அளவு N95 முககவசங்கள் இருப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

N95 முககவசங்களின் பயன்கள் என்ன?

N95 முககவசம்

N95 முககவசங்கள் என்பது ஒரு பாதுகாப்பு சாதனமாகும், இதனை சரியாகப் பயன்படுத்தினால் தூசுப்படலம், நீர்த்துளிகள் மற்றும் காற்றில் பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்கலாம்.

N95 முககவசங்கள் 95% மிகச் சிறிய 0.3 மைக்ரான் துகள்களை தடுக்கிறது.

குறைந்தபட்ச செயல்திறன் தேவைகளுக்கு ஏற்ப இது தொழில்முறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தால் (NIOSH) மதிப்பீடு, சோதனை செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து விமானங்கள் மூலம் முககவசங்கள் சென்றுக் கொண்டிருக்கிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %