சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 24 பேர் சாவு, பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு

Read Time:1 Minute, 32 Second

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு 106 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. ஒரே நாளில் வைரஸ் பாதிப்புக்கு 24 பேர் உயிரிழந்து உள்ளனர். புதியதாக 1,300 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனா முழுவதும் 4000த்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரியவந்து உள்ளது.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வுஹான் நகரம் உள்ளிட்ட 17 நகரங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது. இந்த 17 நகரங்களில்தான் பெரும்பாலும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மற்ற நகரங்களிலும் இந்த பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளார்கள். சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது