இலங்கையில் சீனப் பெண் ஒருவருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சீனர்களுக்கான சுற்றுலா நடைமுறையில் அந்நாட்டு அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது.
சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் ஆன் – அரைவல் விசா பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. VISA ON ARRIVAL எனப்படும் விமான நிலையம் வந்திறங்கியவுடன் வெளிநாட்டினருக்கு விசா பெறும் வசதி நிறுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலும் கொரோனா பீதி மக்களையும் ஆட்கொண்டு விட்டது. அங்கு சீனர்களை கண்டால் மக்கள் விலகி செல்லும் காட்சிகள் காணப்படுகிறது என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே சீன நாட்டவருக்குதான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை நாட்டவருக்கு கிடையாது. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.