உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு

Read Time:2 Minute, 42 Second
Page Visited: 75
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு

மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வர்த்தக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சாலைகளில் ஆம்புலன்ஸ் ராணுவ, போலீஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதையும் மீறி வைரஸ் பரவியதால் வூஹான் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 29 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வூஹான் சீல் வைக்கப்படுவதற்கு முன்பாக அந்த நகரை சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இதன்காரணமாக வூஹானை மையம் கொண்டிருந்த வைரஸ் தற்போது சீனா முழுவதும் வியாபித்து பரவி வருகிறது.

சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிலஉயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 6000 பேர் வரையில் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %