4 பாகிஸ்தான் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Read Time:2 Minute, 3 Second

சீனாவில் 4 பாகிஸ்தான் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமெங்கும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 6000 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது. பிற நாடுகளிலும் பரவி வருகிறது. உலக நாடுகள் தரப்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் தொடங்கிய வைரஸ் பாதிப்பு அந்நாடு முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் வூஹானில் 4 பாகிஸ்தான் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது. வூஹானில் சுமார் 500 பாகிஸ்தான் மாணவர்கள் சிக்கியிருப்பதாகவும், அதில் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்து உள்ளது. மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது.

சீனாவில் பாகிஸ்தானை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களை தவிர 28,000 பாகிஸ்தான் மாணவர்கள் தற்போது இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் தங்கள் குடிமக்களை வுஹானிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டன. பாகிஸ்தானும் அந்நாட்டவர்களை சீனாவிலிருந்து வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.