கிராமி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா படுகவர்ச்சி…

Read Time:2 Minute, 36 Second

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கிராமி விருது விழாவில் தனது கணவரின் குடும்பத்துடன் கலந்துகொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. அவருடைய கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் சகோதரர்கள், மேடையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இரு பாடல்களைப் பாடினார்கள். கிராமி விருது வழங்கும் விழாவில் பிரியங்கா அணிந்திருந்த படுகவர்ச்சியான உடை சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இசை கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடந்தது. இதில் நடிகைகளும், பாடகிகளும் கவர்ச்சி உடைகளில் பங்கேற்று ‘போஸ்’ கொடுத்தனர். போட்டோகிராபர்கள் விதம் விதமாக படம் எடுத்தார்கள்.
பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனசுடன் கிராமி விருது வழங்கும் விழாவுக்கு அவர் அணிந்து வந்த உடை பார்வையாளர்களை நிலைகுலைய வைத்தது.


ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் வகையில் அந்த ஆடையை அணிந்து இருந்ததாக அதிர்ந்தனர். உடலில் மறைக்க வேண்டிய சில பகுதிகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த ஆடை வடிவமைக்கப்பட்டு இருந்தது என விமர்சனங்கள் எழுந்தது. படுகவர்ச்சியாக உடையில் தோன்றிய பிரியங்கா சோப்ராவின் இந்த புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை சமூக வலைத்தளத்தில் பலர் கடுமையாக சாடி வருகிறார்கள்.

இன்னும் சிலர் ஆடை நன்றாக இருப்பதாக பாராட்டியும் உள்ளனர். பிரியங்காவின் தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்குமான ஊக்கம் எனப் பாராட்டியுள்ளார்.