பாகிஸ்தானை 7 நாட்களில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

Read Time:2 Minute, 1 Second

இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு 7 நாட்களுக்கு மேல் ஆகாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டெல்லியில், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி ஜனவரி 28-ம் தேதி நடைபெற்றது. அதில், கலந்துக்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானை விமர்சனம் செய்தார்.

பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவிடம் 3 போர்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இருந்தாலும், இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள், இதை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தன. ஏதேனும் நடவடிக்கை எடுக்க அனுமதி தருமாறு நமது ராணுவம் கேட்டால் கூட அவர்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது என்று கூறினார்.

ஓட்டு வங்கியில் போட்டி போடும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன. அவர்கள் யாருக்காக பாடுபடுகிறார்கள்? பாகிஸ்தானில் அந்த மக்கள் சந்திக்கும் கொடுமை, அவர்களது கண்ணுக்கு தெரியவில்லையா? பாதிக்கப்பட்டவர்களில் பட்டியல் இனத்தவரும் உள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம், துப்புறவு பணிக்கு ஆள் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. அதில், ‘முஸ்லிம் அல்லாதவருக்கு மட்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. அதாவது, பட்டியல் இனத்தவருக்கென அதுபோன்ற வேலையை ஒதுக்கி உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.