மிகவும் கொடூரமானது ‘கொனோரா வைரஸ்…’! ஜப்பானை நிலைகுலை செய்துள்ளது…

Read Time:2 Minute, 30 Second

மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவ தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கும் அதிகமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் மூலமாகவே வைரஸ் வேகமாக பரவுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்குள் வைரஸ் செல்கிறது. அங்கு, சுவாச மண்டலத்தின் செல்களை தாக்குகிறது. நுரையீரலை தாக்கும் வைரஸ் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்தி சுவாசிக்க முடியாமல் செய்து உயிரை பறிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்களை எளிதாக வேட்டையாடுகிறது.

இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவில் வேகமாக பரவும் நிலையில் அங்கிருந்து தங்கள் நாட்டவர்களை மீட்க வேண்டும் என இந்தியா உள்பட உலக நாடுகள் அக்கறை காட்டுகிறது. வைரஸ் பாதிப்பின் கொடூரம் எதிர்பார்ப்பதைவிடவும் அதிகமாக உள்ளது. சீனாவிலிருந்து தங்கள் நாட்டவர்களை விமானங்கள் மூலமாக ஜப்பான் வெளியேற்றுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படுபவர்கள் முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள், பின்னர் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜப்பானுக்கு கொண்டுவரப்படுகின்றனர். இப்படி ஜப்பான் அழைத்து வந்தவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. எந்தஒரு அறிகுறியும் இல்லாமல் ஜப்பானுக்கு அழைத்துவரப்பட்ட இரண்டு ஜப்பானியர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது, ஜப்பானை பெரிதும் கவலையடைய செய்துள்ளது.