பைப் லாரியில் வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வேட்டையாடியது இந்திய ராணுவம்…

Read Time:3 Minute, 12 Second
Page Visited: 37
பைப் லாரியில் வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வேட்டையாடியது இந்திய ராணுவம்…

ஜம்மு காஷ்மீரில் பைப் லாரியில் மறைந்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவம் வேட்டையாடியது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பான் டோல் பிளாசாவில் இன்று அதிகாலை 5 மணியளவில் பாதுகாப்பு படையினர் வாகனச் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பைப் லாரியொன்றை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையின் போது லாரியிலிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடியை கொடுத்தனர். இச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். போலீசார் ஒருவர் காயம் அடைந்தார். இதற்கிடையே மற்ற பயங்கரவாதிகள் அருகிலிருந்த காட்டுக்குள் ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியது. இதற்கிடையே பைப் லாரிக்குள் குகைபோன்ற அமைப்பு காணப்பட்டது. அந்த லாரியின் டிரைவர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது. காட்டுப்பகுதிகள் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான சண்டை நேரிட்டது. இச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு பயங்கரவாதி அங்கு மறைந்துள்ளான். அவனைப்பிடிக்க தீவிர தேடுதல் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், மோப்ப நாய்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் தாக்குதல் நடத்த கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். பயங்கரவாதிகளிடம் இருந்து பெருமளவு ஆயுதம், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்று, லாரிகள் மூலமாக பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய முயற்சி செய்வது தொடர் கதையாக இருக்கிறது என அம்மாநில போலீசார் தெரிவிக்கின்றனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %