கொரோனா வைரஸ் பரவல்: இந்தியா உதவ வேண்டும் – சீனா கோரிக்கை

Read Time:2 Minute, 17 Second

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. கொரோனா வைரசால் சீனா நிலை குலைந்துள்ளது.

இந்நிலையில் வூஹான் நகரிலிருந்து திரும்பிய கேரள மாணவிக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

இதனையடுத்து இந்தியாவில் வைரஸ் பாதிப்பு செய்தியை உன்னிப்பாக கவணித்து வருவதாக டெல்லியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்து உள்ளது.சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் சீனா எடுக்கும் முயற்சிகளை இந்தியாவிடம் தவறாமல் விளக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை சீனா மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கையை கூட்டாக வலுப்படுத்த இந்தியாவுக்கு சீனா ஒத்துழைக்கும்.

இந்தியர்கள் உள்பட சீனாவில் உள்ள ஒவ்வொரு வெளிநாட்டாவரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சீன அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவில் உள்ள இந்தியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்புக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம், அவர்களின் நியாயமான கவலைகளை சரியான நேரத்தில் சரிசெய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சீனாவின் முயற்சிகளுக்கு இந்திய தரப்பு ஆதரவையும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” எனக் கூறி உள்ளார்.