கொரோனா வைரஸ் ஜப்பானை போன்று இந்தியாவிற்கும் எழுந்திருக்கும் சவால் என்ன?

Read Time:2 Minute, 32 Second

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஜப்பானை போன்று இந்தியாவிற்கும் சவால் எழுந்திருக்கிறது.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து எதுவும் கிடையாது.

சீனாவில் தவிக்கும் தங்கள் நாட்டவர்களை உலக நாடுகள் வெளியே கொண்டுவர நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதில் ஜப்பான் முதல் முறையாக தங்கள் நாட்டவர்களை வெளியேற்றியது. வெளியேற்றும் போதும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது வைரஸ் பாதிப்பு இல்லாத ஜப்பானியர்களுக்கு அவர்களுடைய நாட்டிற்கு சென்றதும் வைரஸ் பாதிப்பு காணப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வைரஸ் பாதிப்புக்கு எந்தஒரு அறிகுறியும் இல்லாதவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு அடையாளம் காணப்பட்டு உள்ளது. இது பெரும் சவாலாக அமைந்து உள்ளது. இதனால், ஒவ்வொருநாடும் சீனாவிலிருந்து அழைத்துவருபவர்கள் தனியாக வைத்து மருத்துவ கண்காணிப்பை மேற்கொள்கிறது.

மனித உடலில் கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் அவகாசம் என்பது 14 நாட்களாக இருக்கிறது. சீனாவில் இருந்து திரும்புபவர்கள் அப்போது நலமாக காணப்படுவார்கள். அறிகுறி எதுவும் தென்படாது. ஆனால் 7 நாட்கள் கழித்து அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவருகிறது. அதாவது வைரஸ் உள்ளே சென்றதும் எந்தஒரு அறிகுறியுமின்றி அடைகாக்கிறது. பின்னர் தீவிரம் அடைந்து உயிரை பறிக்கிறது. எனவே உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளது. இதுதான், கேரளாவில் வைரஸ் பாதிப்பால் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி விவகாரத்திலும் நடந்து உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சீனாவிலிருந்து வருபவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைக்க மத்திய மாநில அரசுக்கள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.