டிரஸ் அப்படியே நின்றது எப்படி? பிரியங்கா சோப்ராவின் விளக்கம்…!

Read Time:3 Minute, 50 Second

பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு உடையணியும் பாலிவுட் பிரபலங்களில் முக்கியமானவர் பிரியங்கா சோப்ரா என்றால் மிகையல்ல.

2019-ல் நடந்த `மெட் கலா’ நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை, கொடுக்கப்பட்ட கான்செப்டுக்கான நியாயத்தை செய்தாலும் நெட்டிசன்களால் மீம்ஸ் போடுமளவுக்கு டிரோல் செய்யப்பட்டது.

தற்போது 2020-ம் ஆண்டுக்கான 62-வது கிராமி விருது நிகழ்ச்சியில் பிரியங்கா அணிந்துவந்த உடையை பார்த்த நெட்டிசன்கள் வாய்பிளந்தனர். கழுத்திலிருந்து தொப்புள் பகுதிவரை ஓப்பனாக இருப்பதுபோன்ற டீப் V நெக்லைன் டிசைன் தான் இந்த கவுனின் ஹைலைட் ஆகும். பெல்லி பட்டனில் பிரியங்கா அணிந்திருந்த கிரிஸ்டல் ஸ்டட் செம்ம ஹாட். இவ்வுடையில் கிளாமராக இருந்த பிரியங்காவின் புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கினர்.


இசை கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடந்தது. இதில் நடிகைகளும், பாடகிகளும் கவர்ச்சி உடைகளில் பங்கேற்று ‘போஸ்’ கொடுத்தனர். போட்டோகிராபர்கள் விதம் விதமாக படம் எடுத்தார்கள்.
பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனசுடன் கிராமி விருது வழங்கும் விழாவுக்கு அவர் அணிந்து வந்த உடை பார்வையாளர்களை நிலைகுலைய வைத்தது.


உடையை பிரபல பிரிட்டிஷ் லேபிளான `ரால்ஃப் அண்டு ரஸ்ஸோ’ டிசைன் செய்துள்ளது. டிரஸ் எப்படி அந்த இடத்தில் நின்றது என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது. சிலர் கேள்வியாகவும் சமூக வலைதளங்களில் எழுப்பினர். இந்நிலையில் எப்படி டிரஸ் நின்றது என்பதை பிரியங்காவே விளக்கியுள்ளார்.

அமெரிக்க பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், இருபகுதியிலும் இருக்கும் ஆடையை ஒன்றாக வைத்திருக்கும் வகையில் வலை போன்ற அமைப்பு ஆடையில் இடம்பெற்று இருந்தது. இதில் மேஜிக் என்னவென்றால் இது கேமராவிற்கு கூட தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த ஆடையை உடலில் அணிந்திருக்கும் போது நிர்வகிப்பது கடினம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு, அதில் தோல் நிறத்தில் வலைப்பின்னல் அமைக்கப்பட்டு இருந்தது. ஆடையை ஒன்றாக இணைத்து வைத்திருந்தார்கள். நீங்கள் அதை படங்களில் கூட வலைபின்னல் அமைப்பை பார்க்க முடியாது. ஆனால், ஆடையில் வலைபோன்ற அமைப்பு இல்லாமல் இருந்து இருந்தால் ஆடை அப்படியே நின்றிருக்க வாய்ப்பே கிடையாது. `ரால்ஃப் அண்டு ரஸ்ஸோ’ எப்போதும் எனக்கு நேர்த்தியான ஆடையை வடிவமைக்கிறது எனக் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.