கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து தயாரிப்பதில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரம்

Read Time:1 Minute, 43 Second

கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்து தயாரிப்பதில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்தியாவிலும் இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன். இந்திய விஞ்ஞானிகளும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியை விஸ்தரித்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவிலிருந்து வருபவர்களை தீவிர மருத்துவ கண்காணிப்பில் மத்திய அரசு வைத்து வருகிறது.

சீனாவிற்கு பயணம் செய்த 763 பயணிகள் 26 மாநிலங்களில் மருத்துவ தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ப்ரீத்தி சுதான் கூறியுள்ளார்.

வைரஸ் பரவல் தொடங்கியதுமே உலகத்தில் உள்ள விஞ்ஞானிகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியை தொடங்கிவிட்டனர். வைரசை பிரித்தெடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு மருத்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்திய விஞ்ஞானிகளும் வைரசுக்கு எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.