விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் – மத்திய அரசு அறிவிப்பு

Read Time:1 Minute, 2 Second

மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

2020-2021-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் மின்சார பம்பு செட்டுகள் அமைத்துத் தரப்படும்.

ஊரக அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களுக்கு ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்து உள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.