கொரோனா வைரசால் சீனாவிற்கு வெளியே முதல் உயிரிழப்பு; எண்ணிக்கை 305 ஆக உயர்வு

Read Time:2 Minute, 18 Second

சீனாவில் கொரோனா என்ற வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நோய் பரவி வருவதால் உலக முழுவதும் பெரும் அச்சம் நிலவி வருகிறது. வைரசுக்கு எதிர்ப்பு மருந்து கிடையாத காரணத்தினால் மனிதர்கள் மூலமாக மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை(சனிக்கிழமை வரையில்) சீனாவில் 304 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

சனிக்கிழமை மட்டும் சீனாவில் புதியதாக கொரோனா வைரஸ் 2,590 பேருக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்நாட்டில் ஒட்டுமொத்தமாக 14,350 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருந்து எதுவும் இல்லாமல் வைரஸ் வேகமாக பரவுவது அந்நாட்டை பெரும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. அந்நாட்டு மக்கள் பெரும் சோகத்தில் உறைந்து உள்ளனர்.

இதற்கிடையே பிலிப்பைன்ஸ் நாட்டிலும் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரியவந்துள்ளது. சீனாவிற்கு வெளியே கொரோனா வைரசால் நேரிட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். சீனாவில் 304 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் வூஹானில் மட்டும் 75,815 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வைரஸ் வேகமாக உலகம் முழுவதும் பரவிவருவதால் உலகசுகாதாரத்துறை அவசரநிலையை பிரகடனம் செய்து உள்ளது. வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.