கேரளாவில் 2-வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் – கேரள அமைச்சர்

Read Time:2 Minute, 27 Second
Page Visited: 63
கேரளாவில் 2-வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் – கேரள அமைச்சர்

கேரளாவில் இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

மனிதர்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் சீனாவிலிருந்து திரும்பியவர்களுக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்ட மாணவி திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி சீனாவின் வூஹானில் இருந்து திரும்பியவர். இதேபோன்று சீனாவிலிருந்து திரும்பியவர்கள் தீவிரமாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் இரண்டாவது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

சீனாவிலிருந்து திரும்பிய மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா பேசுகையில், “ஜனவரி 24-ம் தேதி சீனாவிலிருந்து திரும்பிய ஆழப்புழா மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருடைய உடல் நிலை சீராக உள்ளது,” எனக் கூறியுள்ளார். இரண்டாவது வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளதும் அம்மாநில அரசு கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களை டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சீனாவிலிருந்து வந்தவர்களை தனிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %