கொரோனா வைரஸ்: கேரளாவில் 1999 பேருக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பு

Read Time:1 Minute, 7 Second

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவி உள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய இரண்டு மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் 1999 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 75 மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,924 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 104 பேரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் வகையில் பரிசோதனை மையம் ஆலப்புழாவில் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கேரளாவில் வைரஸ் பாதிப்புடன் பயணம் செய்த மாணவருடன் வந்த 8 பயணிகளை மேற்கு வங்காளம் அடையாளம் கண்டுள்ளது.