சீனாவில் கொரோனாவிற்கு ஒரேநாளில் 57 பேர் சாவு, எண்ணிக்கை 361 ஆக உயர்வு

Read Time:1 Minute, 9 Second

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவி உள்ளது.

இதுவரையில் சீனாவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர 17,200 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தீவிரமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்புக்கு 57 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,829 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் அங்கு 21,558 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 475 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.