சொந்த நாட்டு மக்களை கலங்கி நிற்கவைத்த இம்ரான் கான்…!

Read Time:3 Minute, 48 Second

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகள் உகான் நகரில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்கிறது. பாகிஸ்தான் அரசு இதுவரை உகானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அழைத்துச்செல்ல முன்வரவில்லை. உகானில் உள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இம்ரான் கான் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

`உணவு மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமல் ஒரே இடத்தில் அடைந்துள்ளோம். எங்களை மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரஸ் செய்தி வெளியாகி 10 நாள்கள் ஆகியும் இதுவரை எங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என ஹுஹான் நகரில் இருக்கும் பாகிஸ்தான் மாணவர்கள் வீடியோ மூலம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சீனாவில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் மற்றும் மாணவர்களை தற்போதைக்கு மீட்க முடியாது எனக் கைவிரித்து பாகிஸ்தான். சீனாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் நாஹ்மனா ஹாஷ்மி, தங்கள் நாட்டு மாணவர்கள் உகானில் இருந்து அழைத்துச் செல்லப்படமாட்டார்கள். அப்படி அழைத்துச் சென்றால் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான தரமான மருத்துவ வசதிகள் இல்லை என தெரிவித்தார்.

பாகிஸ்தான் மக்களும் மாணவர்களும் சீனாவிலேயே இருப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தூதரகமும் சீன அரசாங்கமும் இணைந்து சீனாவில் இருக்கும் பாகிஸ்தான் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதைப் பாகிஸ்தான் மக்களுக்கு நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வுகான் மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு செல்ல யாருக்கும் அனுமதியில்லை. அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் அங்கிருக்கும் பாகிஸ்தான் மக்களை மீட்டு தாயகம் அனுப்புவதே எங்கள் முதல் வேலையாக இருக்கும் என்றும் ஹாஷ்மி தெரிவித்தார். அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதற்கிடையே பாகிஸ்தான், சீனாவிற்கான விமான சேவையையும் மீண்டும் தொடங்கி உள்ளது. வைரஸ் பரவியதும் விமான சேவையை நிறுத்திய பாகிஸ்தான் அச்சேவையை தொடங்கி உள்ளது. இதற்கிடையே அங்கு நிற்கதியாக நிற்கும் பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப வழிகிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற தெரியாத இம்ரான் என விமர்சனங்களும் டுவிட்டரில் பறந்து வருகிறது.