கொரோனா வைரஸ் பரவல்: நாகலாந்தில் சீனப் பல்கலைக்கழகம் ரகசியமாக ஆராய்ச்சி…! அதிர்ச்சி தகவல்கள்

Read Time:3 Minute, 31 Second

உலகம் முழுவதும் நிபா, எபோலா என பல்வேறு விதமான புதிய வைரஸ் பரவலால் பாதிப்பு நேரிட்டு வருகிறது.

தற்போது இவ்வரிசையில் சீனாவிலிருந்து வெளியாகிய கொரோனா வைரசாகும். இவையனைத்திற்கும் தடுப்பு மருந்துக்கள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, கண்டுபிடிப்பதில் சிரமமும் நிலவுகிறது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் சீனா உருவாக்கிய உயிரியல் ஆயுதம் எனவும் செய்திகள் வெளியாகியது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த டிசம்பரில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அரசுக்கு தெரியாமல் ஒரு மிகப்பெரிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது.

அமெரிக்க, சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளவால்கள் மற்றும் எபோலா போன்ற கொடிய வைரஸ்களுக்கு எதிரான சக்தியை கொண்டுள்ள மனிதர்கள் குறித்து நாகாலாந்தில் ஆய்வை மேற்கொண்டு உள்ளனர். நாகாலாந்தில் இருக்கும் வௌவால்கள் எப்படி உயிர் வாழ்கிறது. அதன் உடலில் எப்படிப்பட்ட வைரஸ் கிருமிகள் உள்ளது. இந்த வைரஸ் கிருமிகள் இருந்தும், அவைகள் சாகாமல் இருப்பது எப்படி?. அதற்கு எதிர்ப்பு சக்தி எங்கே இருக்கிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். நாகலாந்து இளைஞர்களிடம் வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ளும் ஒருவகை எதிர்ப்பு சக்திகள் இருப்பது தொடர்பாகவும் பெரும் ஆய்வை செய்து உள்ளனர்.

அக்டோபர் மாதம் இதுதொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகலாந்து எபோலா வைரஸ் நோயின் வரலாற்று பதிவுகள் இல்லாத பிராந்தியமாகும். இங்கு வேட்டையாடும் தொழிலில் ஈடுபட்டுள்ள மனிதர்கள் மற்றும் வெளவால்களில் வைரஸை எதிர்க்கொள்ளும் எதிர்ப்பு சக்திகள் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசிடம் அனுமதிப்பெறாமல் பாதுகாக்கப்பட்ட முக்கிய பிராந்தியத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது கொரோனா வைரஸ் பரவும் சீனாவின் வூஹான் நகரில் உள்ள வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி கல்வி நிறுவனத்தை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் இடம்பெற்று உள்ளனர். எனவே, இதுதொடர்பான விசாரணையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டாடா ஆராய்ச்சி மையம், அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 12 ஆராய்ச்சியாளகள் இங்கு ஆய்வை மேற்கொண்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணையை நடந்த குழுவை அனுப்பியுள்ளது.