கோட்டையத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி, கேரளாவில் அவசர நிலை அறிவிப்பு

Read Time:1 Minute, 32 Second

கேரளாவில் சீனாவிலிருந்து திரும்பியவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

வீடுகளில் இருப்பவர்களிடம் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தொர்புக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக அதிகாரிகளை தொடர்புக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனாவிலிருந்து திரும்பிய இருவர் கோட்டையத்தில் வீட்டில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவ குழுவினரால் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனியான வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் காணப்பட்ட வைரஸ் கேரளாவில் மூன்று பேரை தாக்கி உள்ளது. இதனால், கேரளாவில் அதிஉயர் உஷார் நிலையில் அரசு மருத்துவ துறைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் மருத்துவ அவசரநிலையை அம்மாநில் அரசு பிறப்பித்து உள்ளது.