அரசு பேருந்திலிருந்து இறங்கிய கல்லூரி விரிவுரையாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூரம்…!

Read Time:2 Minute, 44 Second

மராட்டியத்தில் அரசு பேருந்திலிருந்து இறங்கிய கல்லூரி விரிவுரையாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூரச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் ஏதோ ஒருவகையில் நடந்துக்கொண்டே வருகிறது. தற்போது ஒரு கொடூரமான செய்தி மராட்டியத்திலிருந்து வெளியாகி உள்ளது.

நாக்பூரிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வார்தா மாவட்டத்தில் உள்ள மாடோஸ்ரீ ஆஷாதாய் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் 25 வயது பெண் ஒருவர் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். தரோடே கிராமத்திலிருந்து தினமும் 15 கிலோ மீட்டர் தொலைவு பஸ்சில் சென்று ஹின்காங்காட்டில் இறங்கி கல்லூரிக்கு செல்வார். இன்று காலை 7:30 மணியளவில் அவர் பஸ்சிலிருந்து இறங்கிய சமயம் இளைஞர் ஒருவர் வழிமறித்து தகறாறு செய்து உள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து உள்ளது. உடனடியாக தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பெண் ஆசிரியரின் முகத்தில் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

இதில் கதறி துடித்த ஆசிரியையின் மீது அவ்வழியாக சென்றவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருடைய தலைப்பகுதியில் 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. உயிருக்கு போராடி வருகிறார். மூச்சுவிடுவதில் பெரும் சிரமம் கொண்டுள்ளார். அவருடைய காது, முகம், வாய், தொண்டை வரையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விக்கி என்பவனை கைது செய்து உள்ளது. அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 7 மாத குழந்தையுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஆசிரியையிடம் தவறாக நடந்து வந்துள்ளான் என தெரியவந்து உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %