அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைப்பு…

Read Time:4 Minute, 48 Second
Page Visited: 108
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைப்பு…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதித்த உச்ச நீதிமன்றம், கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. அறக்கட்டளையிடம் 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். கோவிலின் கட்டுமான பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும்.

அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. இதனையடுத்து அறக்கட்டளை அமைக்கப்படுவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் மீடியாக்களில் வெளியாகியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மோடி பதில் அளித்தார்.

பிரதமர் மோடி பதில் அளிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டது. உத்தரவின்படி ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கோவில் கட்டுவதற்கு விரிவான திட்டங்களை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இதன்படி 67.77 ஏக்கர் நிலம் முழுவதும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முஸ்லிம்களுக்கு தேவையான 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திடம் வழங்கப்படும். இந்த நிலத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கும்’’ என்றார்.

15 அறங்காவலர்கள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு தலித் உறுப்பினர் உள்ளிட்ட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மக்களவையில் ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா அறக்கட்டளையில் 15 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 15 பேரில் ஒரு உறுப்பினர் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தில் இருந்து நியமிக்கப்படுவார்.

கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை உருவாக்கும் முடிவை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் 67 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்படும். கோவில் தொடர்பான ஒவ்வொரு முடிவையும் இந்த அறக்கட்டளை சுயமாக ஆலோசித்து எடுக்கும். நூற்றாண்டுகளாக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் ராமர் பிறந்த இடத்தில் எழுப்பப்படும் கோவிலை காணவும், மரியாதை செலுத்தி தரிசனம் செய்யவும் காத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை நிறைவேறும் என நம்புகிறேன்,” எனக் கூறினார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %