பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சியை ஆப்கான் நிறுத்தியது

Read Time:2 Minute, 24 Second
Page Visited: 82
பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சியை ஆப்கான் நிறுத்தியது

பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சியை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் இந்தியாவுக்கு எதிரான நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் தூதரகம் திட்டமிட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை ஆப்கானிஸ்தான் அரசு அதிரடியாக ரத்து செய்ய செய்துள்ளது. பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ‘காஷ்மீர் ஒற்றுமை தினமாக’ கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி 5-ம் தேதி இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

ஆனால் காபூலில் உள்ள ஓட்டல் நிர்வாகம், இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து செவ்வாயன்று பாகிஸ்தான் தூதரகம், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அரசை விமர்சனம் செய்து உள்ளது. ஓட்டல் நிர்வாகம் முன்பதிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

“இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் தூதரகம் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பொருத்தமான இடத்தில் நடத்த ஆப்கானிஸ்தான் அரசால் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நம்புகிறது” என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %