கொரோனா வைரஸ்: 24 மணி நேரங்களில் 73 பேர் சாவு… வழியின்றி தவிக்கும் சீனா…!

Read Time:1 Minute, 52 Second
Page Visited: 80
கொரோனா வைரஸ்: 24 மணி நேரங்களில் 73 பேர் சாவு… வழியின்றி தவிக்கும் சீனா…!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மனிதர்கள் மூலமாக எளிதில் பரவும் கொரோனா வைரஸ் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து உள்ளது.

சீனாவில் வைரசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும், புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது சீனாவை நிலைகுலைய செய்துள்ளது.

வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா மேற்கொண்டாலும் பலன் வெகுவாக கிடைப்பதாக தெரியவரவில்லை. சீனா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணிநேரங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 73 பேர் உயிரிழந்தனர். இதுவரையில் வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,018 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பலர் மோசமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உகானில் மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே மற்றொரு மருத்துவமனையை உடனடியாக கட்டவும் சீன அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %