நீங்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு ‘எண்டே’ கிடையாது…! எதிர்க்கட்சிகளை கலாய்த்த பிரதமர் மோடி

Read Time:1 Minute, 5 Second

நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வின் போது ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மக்களையில் பிரதமர் மோடி பேசுகையில், பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மக்களவையில் பேசுகையில் உங்களுடைய “வேலையின்மைக்கு” எங்கள் அரசாங்கம் உதவாது என்று கூறினார்.

உங்களுடைய வேலையின்மையை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் விடமாட்டோம் என்று பிரதமர் மோடி பேசியதும் ஆளும் கட்சி உறுப்பினர்களை மேஜையை தட்டி வரவேற்றனர்.

வேலையின்மைக்கு தீர்வு காணாவிட்டால் இளைஞர்கள் பிரதமர் மோடியை குச்சிகளால் அடிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு பதிலடியை மோடி கொடுத்து உள்ளார்.