பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்கு ஒரு ‘கடினமான பாடத்தை’ கற்பிக்கும்… இம்ரான் சவுடால்

Read Time:1 Minute, 3 Second

‘காஷ்மீர் ஒற்றுமை தினத்தில்’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மீர்பூரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்கு ஒரு ‘கடினமான பாடத்தை’ கற்பிக்கும் என சவுடால் விடுத்துள்ளார்.

“இந்திய பிரதமர் மோடியும், ராணுவமும் ஆகஸ்ட் 5 -ம் தேதியே (ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்)தவறை செய்துவிட்டனர். இனி ஏதேனும் தவறாக நடந்தால் பாகிஸ்தானின் 200 மில்லியன் மக்களும், ராணுவமும் இந்தியாவுக்கு ஒரு கடினமான பாடத்தை கற்பிப்பார்கள்,” என பேசியுள்ளார் இம்ரான் கான்.

தாக்குதல் என்ற அச்சுறுத்தல்களை இந்திய தலைவர்கள் மற்றும் ராணுவம் தவிர்க்க வேண்டும் எனவும் இம்ரான் பேசியுள்ளார்.