கொரோனா வைரஸ் எறும்பு தின்னி மூலமாக பரவியிருக்கிறது என விஞ்ஞானிகள் தகவல்

Read Time:4 Minute, 33 Second
Page Visited: 480
கொரோனா வைரஸ் எறும்பு தின்னி மூலமாக பரவியிருக்கிறது என விஞ்ஞானிகள் தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் எறும்பு தின்னியிலிருந்து பரவியிருப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளது என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயின் உகான் நகரில் உருவான உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா முழுதும் பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பலியான 73 பேர்களில் 69 பேர் ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் வவ்வால் அல்லது பாம்பு மூலமாக பரவியிருக்கலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எறும்பு தின்னி மூலமாக பரவியிருக்கிறது என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

எறும்பு தின்னி செதில்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆண்மைக் குறைவு, புற்று நோய் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதாக சீனாவில் தொன்று தொட்டு நம்பப்படுகிறது. சீனா மட்டுமலாது மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் எறும்பு தின்னியின் செதில்களுக்கு மவுசு இப்போதும் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அறிவியல் ஆராய்ச்சிகளின்படி எறும்பு தின்னியின் செதில்களில் எந்த நன்மையையும் இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இறைச்சிக்காகவும் மறைமுகமாக வேட்டையாடப்படுவதால் அழிவின் விழிபிலிருக்கும் இனம் எறும்பு தின்னியாகும்.

ஆபத்தான நிலையிலிருக்கும் எறும்பு தின்னிகள் சீனா முழுவதும் கொரோனா வைரஸை பரப்புவதற்கு உதவிய இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தெரிவித்து உள்ளனர்.

தென்சீன வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செதில்களை கொண்ட பாலூட்டியான எறும்பு தின்னி, வைரஸ் பரவலுக்கு இடைநிலையாக செயல்பட்டு இருக்கலாம் என அடையாளம் கண்டுள்ளனர். மேலும் விவரங்களை வழங்காமல் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் உகான் நகரில் ஒரு நேரடி விலங்கு சந்தையில் தோன்றிய புதிய வைரஸ் வவ்வால்களால் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு பரவுவதில் ஒரு “இடைநிலை ஹோஸ்ட்” ஆக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

காட்டு விலங்குகளிடமிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்த பின்னர், பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

எறும்பு தின்னிகளில் காணப்படும் வைரஸ்களின் மரபணு வரிசைமுறைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 99 சதவீதம் ஒத்ததாக இருப்பதை கண்டறிந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த உலகத்தில் அதிகமாக கடத்தப்பட்ட விலங்காக எறும்பு தின்னி கருதப்படுகிறது மற்றும் கடந்த பத்தாண்டுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான எறும்பு தின்னிகள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டு உள்ளது என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %