கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு, அரசு மீது மக்கள் கடும் கோபம்…!

Read Time:4 Minute, 52 Second
Page Visited: 57
கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு, அரசு மீது மக்கள் கடும் கோபம்…!

சீனாவில் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கியதில் சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்தது. சுமார் 34,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சார்ஸ் வைரஸைவிட கூடுதல் உயிரிழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சீன நிறுவனமான டென்சென்ட், கொரோனா வைரஸ் நோய் தாக்கி 24 ஆயிரத்து 589 பேர் பலியானதாக கூறியது. இந்த வைரஸ் நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 23 எனவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாவதை கவனித்ததும் டென்சென்ட் உடனடியாக அரசாங்கத்தின் “உத்தியோகபூர்வ” எண்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றம் செய்தது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், அதனை சீன அரசு மறைப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அரசு பொய்யான தகவல்களை தெரிவிக்கிறது, போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், வைரஸ் தொற்று தொடர்பாக எச்சரிக்கை விடுத்தவர்களை எச்சரித்து முடக்கி நிலையை மோசமாக்கி உள்ளது எனவும் அரசு மீது மக்கள் கோபம் கொண்டு உள்ளனர்.

வைரஸ் தடுப்பு மாஸ்க் பற்றாக்குறை

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து காத்துக்கொள்ளும் ஆன்ட்டிவைரஸ் மாஸ்க் எனப்படும் வைரஸ் தடுப்பு முகமூடி உற்பத்தி போதுமான அளவு இல்லாதது கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரிக்கை விடுத்தார். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை உலகம் எதிர்கொள்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலிலிருந்து காத்துக்கொள்ளும் ஆன்ட்டிவைரஸ் மாஸ்க் உற்பத்தியில் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தீர்க்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக இதற்கென்று உள்ள விநியோக சங்கிலி வலையமைப்பின் உறுப்பினர்களுடன் பேசி பாதுகாப்பு வேலைகளை முடுக்கிவிட வேண்டிய அவசரமான பணியில் நான் ஈடுபட்டுவருகிறேன். இந்த வார தொடக்கத்தில் இருந்தே உதவி தேவைப்படும் நாடுகளுக்கு முகக்கவசங்கள், கையுறைகள், சுவாசக் கருவிகள், பாதுகாப்பு தனிமைப்படுத்தும் ஆடைகள் மற்றும் சோதனைக் கருவிகளை டபிள்யூஎச்ஓ அனுப்பி வருகிறது. இன்னும்கூட வைரஸின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ள சில நாடுகள் தவறிவிட்டன. அந்த தகவல்களை உடனடியாக பகிர்ந்து கொள்ள அந்த உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறோம்.

கரோனா வைரஸ் பரவலை தனியாக எந்த நாடும் எந்த அமைப்பும் தடுத்துவிட முடியாது. கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இது ஒரு நல்ல செய்தி, ஆனால் அந்த செய்தியை நீங்கள் படிக்கும்போதே நாம் எச்சரிக்கிறோம் – இந்த எண்கள் மீண்டும் உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %