500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை….

Read Time:3 Minute, 42 Second
Page Visited: 77
500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை….

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டது. அப்போது 2016-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சென்னை, கோவை, காஞ்சீபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் ரூ.1,674 கோடிக்கு சசிகலா சொத்துகள் வாங்கி குவித்திருந்தது தெரியவந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் வருமான வரித்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது.

விசாரணையில், புதுச்சேரியில் உள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான கேளிக்கை விடுதியை (ரிசார்ட்) ரூ.168 கோடிக்கு விற்பனை செய்ய ஒத்துக்கொண்டு சசிகலாவிடம் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.148 கோடியை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

பணத்தை பெற்றுக்கொண்ட போதும், தற்போது வரை அந்த கேளிக்கை விடுதி சசிகலா பெயருக்கு மாற்றப்படாமல் இருப்பதும், சசிகலாவிடம் இருந்து பெறப்பட்ட ரூ.148 கோடி லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனம் மூலம் சம்பாதித்தது போன்று நிறுவனத்தின் உரிமையாளர் வங்கியில் அந்த பணத்தை டெபாசிட் செய்து இருப்பதும் வருமான வரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை பினாமி சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு கடந்த மாதம் 20-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. நகை கடை அதிபர் நவீன்பாலாஜி தங்கள் தரப்பு விளக்கத்தை கூறி, முடக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தற்போது உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார். இதேபோன்று, சசிகலா பினாமி பெயரில் ரூ.1,674 கோடிக்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் வாங்கிய சொத்துகளை முடக்குவதற்காக நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %