சார்ஸ் தாக்குதலை விஞ்சியது கொரோனா வைரஸ்… பெரும் அச்சத்தில் சீன மக்கள்…

Read Time:1 Minute, 25 Second

சீனாவில் உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

வைரசால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதேபோன்று வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. இவ்வைரஸ் சீன மக்களை பெரும் அச்சத்தில் வைத்து உள்ளது.

இந்த வைரஸ் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வழியின்றி சீனா திணறி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளுடன் உகான் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 811 பேர் பலியாகி உள்ளதாகவும், 37,198 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2002-2003ம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் பலியானோர் (770) எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. சீனாவை தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூரில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.