சீனாவிலிருந்து 647 இந்திய மாணவர்களை வெளியேற்ற இந்தியா அமைதியாக திட்டமிட்டது எப்படி?

Read Time:7 Minute, 42 Second

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டது. ஜனவரி 10-ம் தேதி வைரஸ் பாதிப்பை உறுதிசெய்த சீன அரசு முதல் உயிரிழப்பு தொடர்பாகவும் தகவல் வெளியிட்டது. இதனையடுத்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் மத்திய சீனாவில் ஒரு புதிய இன்ஃப்ளூயன்ஸா தொற்று (கொரோனா வைரஸ் தொற்று) பற்றிய அறிக்கைகளை பற்றி விவாதித்து உள்ளது.

ஜனவரி இரண்டாவது வாரத்தில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஹுபேய் மாகாணத்திலும், உகான் நகரிலும் இருந்த பதிவுசெய்யப்பட்ட இந்தியர்களின் கோப்புகளை ஆய்வு செய்ய தொடங்கினர். நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் சீன புத்தாண்டையொட்டி விடுமுறைக்கு ஏற்கனவே இந்தியாவுக்கு சென்றுவிட்டனர் என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
இந்தியா தனது முதல் ஆலோசனையை ஜனவரி 17 அன்று சீனாவுக்கு செல்லும் மற்றும் பயணிக்கும் குடிமக்களுக்காக வெளியிட்டது. கவனமாக இருங்கள், முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கையை எடுத்து கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து பகிரங்கமாக அறிக்கையை வெளியிட்டார். இதனையடுத்து இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பாக தீவிரமான நடவடிக்கையை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.

ஜனவரி 23 காலை ஒரு திருப்புமுனையாக இருந்தது, உகானில் நூற்றுக்கணக்கான இந்தியர்களுடன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உகானிலிருந்த இந்தியர்கள் தூதரகத்தை அழைக்க தொடங்கினர், மீட்கப்பட வேண்டும் என்று விரும்பினர், சிலர் இந்திய வெளியுறவுறுத்துறைக்கு டுவிட் செய்தனர். உகான் நகரத்தில் இருந்தும், ஹுபேய் மாகாணத்திலிருந்து இந்தியர்களை வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தை தூதரகம் உணர்ந்தது. ஒரு சில நாட்களில் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக உகான் மாறியது, பல ஒப்புதல்கள் இல்லாமல் யாரும் அணுக முடியாது என்ற நிலைக்குள் வந்தது.

அடுத்த சில நாட்களில், தூதரக அதிகாரிகள் ஹுபேயில் உள்ள இந்தியர்களை பட்டியலிட தொடர்ச்சியாக பணியாற்றினர். சீனாவில் தூதரகங்களில் இந்தியர்கள் பதிவு செய்வது கட்டாயமில்லை என்பதால் இது எளிதான காரியமாக இருக்கவில்லை. “நாங்கள் முகத்தில் ஒரு பெயரை இணைக்க வேண்டியிருந்தது, பின்னர் பாஸ்போர்ட் எண்ணை இணைத்தோம். நாங்கள் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம். பின்னர் நாங்கள் அவர்களுக்கு உறுதியளித்தோம், ”என்று தூதர் விக்ரம் மிஸ்ரி கூறினார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பலர் உதவியை கோரியுள்ளனர்.

மொத்த பணியின் முடிவில் ஹுபேயில் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 680 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பிறகு சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணி தொடங்கியது. பெய்ஜிங்கில் வெளியுறவு அமைச்சகம், ஹுபேய் வெளியுறவு அலுவலகம், கடைசியாக உகானின் வெளியுறவு அலுவலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. முதலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவை சேர்ந்த இளம் மாணவர்களை பற்றி அவர்களுடைய பெற்றோர்களுக்கு கவலையுள்ளது, அவர்கள் தங்களுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுபேயில் உள்ள இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரவேண்டும் என்பதில் வெளியுறவுத்துறை சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டது.
பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, ஹுபேய் முழுவதும் தங்கியிருக்கும் இந்தியர்களை உகானுக்கு அழைத்துவர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணியில் 12க்கும் அதிகமான பஸ்கள் அமர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து ஓட்டுனர்களும் உகான் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டியிருந்தது. இதனால் அவர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு செல்ல தேவையான அனுமதி பெற்றனர். பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இந்தியர்கள் வெளியேற்றத்தை ஒருங்கிணைக்க தூதரகம் தீபக் பத்மகுமார் மற்றும் எம்.பாலகிருஷ்ணன் ஆகிய இரு தூதர்களை உகானுக்கு அனுப்பியது. அவர்கள் இப்போது புதுதில்லியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். முதல்முறையாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதுடன் ஒப்பிடும்போது இரண்டாவது முறை மிகவும் கடினமாக இருந்துள்ளது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களை உகானுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததால், இரண்டாவது வெளியேற்றும் செயல்முறை மிகவும் சிக்கலாக இருந்துள்ளது.

ஹுபேயில் ஒரு சில இடங்களில், தொற்று பரவக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் தங்கள் பகுதிக்குள் பேருந்துகளுக்குள் நுழைவதை வலுக்கட்டாயமாக நிறுத்தினர். பின்னர் பஸ் இந்திய தூதரகத்தால் பணியமர்த்தப்பட்டு உள்ளது என உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் பெறலில் அங்கு நேர்மையை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. உகான் விமான நிலையத்தில், வெளியேற்றப்பட்டவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை, போர்டிங் பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. ஹுபேய் மற்றும் உகானில் இருந்து தங்கள் குடிமக்கள் வெளியேற்றப்பட வேண்டுமா? என்பது தொடர்பாக இந்தியா தெற்காசிய நாடுகளுக்கு செய்திகளை அனுப்பியியுள்ளது. மாலத்தீவு உதவி கோரியது. இதனையடுத்து அந்நாட்டை சேர்ந்த ஏழுபேரும் உகானிலிருந்து இந்தியர்களுடன் வெளியேற்றப்பட்டனர்.

உகானில் தங்கியுள்ள 80 இந்திய மாணவர்களுடன் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது என்றும் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. “நாங்கள் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் உறுதி செய்துள்ளோம், மேலும் எந்தவொரு தகவலையும் தெரிவித்துக்கொள்வோம், ”என்று தூதர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.