சிறுத்தை குட்டிக்கும் உடும்புக்கும் இடையிலான ஒரு கொடிய சண்டை தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களின் சுற்றி மிக விரைவாக வைரலாகி வருகிறது. 29 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பை டுவிட்டரில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்து உள்ளார். இணையத்தில் இந்த வீடியோவிற்கு மிகவும் அதிகமான வரவேற்பு கிடைத்து உள்ளது. வீடியோ ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட சில மணிநேரங்களில் பலரது வரவேற்புடன் வேகமாக பரவியது.
மணல் சாலையில் செல்லும் உடும்பை சிறுத்தைக்குட்டி பிடிக்க முயற்சி செய்யும் சண்டை ஒரு மணல் சாலையில் நேரிட்டுள்ளது. மணல் சாலையை கடக்க முயற்சி செய்யும் உடும்பை பின்தொடரும் சிறுத்தைக்குட்டி தன்னுடைய காலால் தாக்குகிறது. சிறுத்தை குட்டியிடம் இருந்து தன்னை காப்பாற்றுவதற்காக உடும்பு அதன் வால் மூலம் பல முறை அடிக்கிறது. அப்படி தொடங்கும் சண்டையில் உடும்புக்கு பலன் கிடைக்கவில்லை. சிறுத்தைக்குட்டி தன்னுடைய காலால் தாக்கிய வண்ணம் சட்டென்று உடும்பின் கழுத்தை பிடித்துவிட்டது. வாயில் உடும்பை கவ்விக்கொண்டு வேட்டை கிடைத்த மகிழ்ச்சியில் சிறுத்தைக்குட்டி நேராக புல்வெளிகளுக்கு சென்றுவிட்டது.
#Leopard V/S Monitor #Lizard. This lizard is a fighter but #Leopards are excellent hunters. As Jim Corbett somebody said ‘King in the making’. Via Whatsapp. pic.twitter.com/hhway2dxyL
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 5, 2020
இந்த வீடியோ கடந்த 2018-ம் ஆண்டு ஜாம்பியா காட்டுக்குள் எடுக்கப்பட்டது. இப்போது இந்திய வனத்துறை அதிகாரி கஸ்வான் மீண்டும் பதிவு செய்ததால் மீண்டும் வைரலாகி வருகிறது.