ரூ. 4,600 கோடிக்கு சொகுசு படகு வாங்கிய பில் கேட்ஸ்…!

Read Time:3 Minute, 6 Second
Page Visited: 87
ரூ. 4,600 கோடிக்கு சொகுசு படகு வாங்கிய பில் கேட்ஸ்…!

மைக்ரோசாப்ட் துணை நிறுவனரும், உலகின் இரண்டாம் பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ், சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மாற்று எரிப்பொருள் கண்டுபிடிப்பில் அதிக நாட்டம் கொண்டுவராக இருக்கிறார்.

வாகனங்கள், தொழில்சாலைகளில் வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரித்து சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதுடன் வெப்பமையமாதலை அதிகரிக்க செய்கிறது. சூரிய வெப்பத்தை கனரக தொழிற்சாலைகளும் பயன்படுத்தும் வகையில் அதிக வெப்பநிலையை அடைய செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கலிபோர்னியாவின் ஹிலியோஜென் நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளார். இதனால், கார்பன் உமிழ்வு இல்லாமல் கனரக தொழிற்சாலைகளை இயக்க முடியும் என நிறுவனம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

பில் கேட்ஸ் விடுமுறை காலங்களில் சொகுசு படகில் உல்லாச பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக வாடகைக்கு சொகுசு படகுகளை எடுத்து பயணம் மேற்கொள்வது அவருடைய வழக்கம் ஆகும். இந்நிலையில் சுற்றுசூழலுக்கு உகந்த மற்றொரு நடவடிக்கையாக பில் கேட்ஸ் ரூ. 4,600 கோடிக்கு ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக செயல்படும் சொகுசு படகு ஒன்றை வாங்கி உள்ளார்.

திரவ ஹைட்ரஜனால் இயக்கப்படும் முதல் சொகுசு படகு இதுவாகும்.

படகில் பிரேத்யகமாக அமைக்கப்பட்டு உள்ள பிளேட்டுகளில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை கலப்பதன் வாயிலாக பேட்டரி மற்றும் மோட்டர் இயங்க மின்சாரம் உற்பத்தி செய்து திரவ ஹைட்ரஜன் இயங்குகிறது. மேலும், அவசர காலங்களில் டீசலில் இயங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பில் கேட்ஸ் வாங்கும் ‘அகுவா’ சொகுசு படகு 370 அடி நீளம் கொண்டது.

படகில் மொத்தம் 5 அடுக்குகள் உள்ளது. உள்ளே நட்சத்திர விடுதியை போன்று ஜொலிக்கும் படகில் 31 பணியாளர்கள் பணியாற்றுவர். 24 விருந்தினர்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. படகில் ஜிம், அழகு நிலையம், யோகா அறை, ஸ்பா மற்றும் நீச்சல் குளம் என அனைத்து சிறப்பு வசதிகளும் உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %