காஷ்மீருக்காக கவலைப்பட வேண்டாம்… அமெரிக்க செனட் உறுப்பினருக்கு இந்தியா நேரடி பதில்

Read Time:2 Minute, 43 Second

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் நீக்கியது. இவ்விவகாரத்தில் பிறநாடுகள் கருத்து தெரிவிக்க இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும் நாடுகளுக்கு இந்தியா தக்க பதிலடியையும் கொடுத்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

தற்போது அமெரிக்க செனட் உறுப்பினருக்கு இந்தியா சரியான பதிலடியை நேரடியாக கொடுத்து உள்ளது.

ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த பாதுகாப்பு கூட்டத்தில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்த பாதுகாப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்டசி கிரஹாம் (டொனால்டு டிரம்பிற்கு நெருக்கமானவர்) பேசுகையில், காஷ்மீர் பிரச்சியனை பொறுத்தவரையில் அது எப்படி முடிகிறது என்பது எனக்கு தெரியவில்லை. காஷ்மீர் விவகாரத்தை ஜனநாயக முறையில் தீர்த்து மக்களை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்,” என நீளமாக பேசினார்.

இந்தியா முன்னேறி வருகிறது. அமெரிக்காவை போன்று இந்தியாவுக்கும் சில உள்நாட்டு பிரச்சினைகள் உள்ளன. இந்தியா ஜனநாயக பாதையை தேர்வு செய்து உள்ளது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் இது எவ்வாறு முடியும் என்று தெரியவில்லை. காஷ்மீர் விவகாரத்தை ஜனநாயக முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என்றார் கிரஹாம்.

இதற்கு நேரடியாக பதில் அளித்த வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், நீங்கள் இதற்காக கவலைப்பட வேண்டாம். காஷ்மீர் விவகாரத்தை ஒரு ஜனநாயக நாடு (இந்தியா) தீர்த்து வைக்கும்.” என்றார். அவருடைய பதிலடி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவருடைய பதிலடிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.